சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு...! இன்றைய விலை நிலவரம் என்ன....? - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக உயர்வில் இருந்த தங்கம் விலை தற்போது சரிவை சந்தித்துள்ளது. கடந்த 10 மற்றும் 11-ந்தேதிகளில் தொடர்ந்து உயர்ந்த தங்கம், நேற்று குறைந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.15,120-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,960-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.150 மற்றும் சவரனுக்கு ரூ.1,200 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,970-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,760-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் சரிந்து, சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.70 குறைந்து தங்கம் ரூ.14,900-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold Prices Chennai Witness Sudden Drop What Today Rates


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->