நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.70 லட்சம் கோடி; கடந்த ஆண்டு நவம்பரை விட 0.7 சதவீதம் அதிகரிப்பு..!
GST tax collection for November is Rs 170276 crore
இந்தாண்டு நவம்பர் மாதம் மொத்த ஜி.எஸ்.டி., வரி வசூல் முந்தைய ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 276 கோடி வசூல் ஆகியுள்ளதாகவும், எனினும், அக்டோபர் 2025-இல் இந்த வரி வசூல் ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் கோடியாக இருந்தது என விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டம்பர் 22-இல் நூற்றுக்கணக்கான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதோடு, வரி அடுக்குகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.14 லட்சத்து 75 ஆயிரத்து 488 கோடியாக இருக்கிறது.

இந்த ஜி.எஸ்.டி., வரி வசூல் நவம்பர் மாதத்தில் சில மாநிலங்களில் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், சில மாநிலங்களில் சரிந்துள்ளது. அந்தவகையில், அருணாச்சல், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அசாம் மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது.
அதேப்போன்று மகாராஷ்டிராவில் 03 சதவீதமும், கர்நாடகாவில் 05 சதவீதமும், கேரளாவிலும் 07 சதவீதமும் வரி வசூல் அதிகரித்துள்ளது. இருப்பினும், குஜராத்தில் 07 சதவீதமும், தமிழகத்தில் 04 சதவீதமும், உ.பி.,யில் 07 சதவீதமும், ம.பி.,யில் 08 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 03 சதவீதமும் வரி வசூல் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
GST tax collection for November is Rs 170276 crore