டி20 உலகக் கோப்பை; மழை காரணமாக பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சூப்பர் 08 போட்டி ரத்து..! - Seithipunal
Seithipunal


10 வது டி 20 உலக கோப்பை தொடரை இந்தியா- இலங்கை இருநாடுகளும் இணைந்து நடத்துகின்றன. அதன்படி, இந்த 2026 -ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 07-ஆம் தேதி இலங்கையில் முதல் போட்டியுடன் தொடங்கியது. 

20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

இதில், நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (குரூப் ஏ) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (குரூப் பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (குரூப் சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (குரூப் டி) ஆகிய நாடுகள் சூப்பர் 08 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சூப்பர் 08 சுற்று இன்று (21-ஆம் தேதி) தொடங்கியது. இந்த போட்டி  இன்று இரவு 07 மணிக்கு கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற இருந்தது. முதல் ஆட்டத்தில், நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோத இருந்தன. அதன்படி, இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அப்போதும் மழை தூறல் இருந்ததால் போட்டி தாமகதம ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கபட்டத்து.

ஆனால், மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டி கைவிடப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 01 புள்ளிகள் கொடுக்கப்படும். குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் ஒரு தோல்வியுடனும், குரூப் டி யில் நியூசிலாந்து ஒரு தோல்வியுடனும் சூப்பர் 08 போட்டிக்கு தகுதி பெற்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The first Super 08 match between Pakistan and New Zealand was cancelled due to rain


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->