கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு இரண்டாவது திருமணம்; நீண்ட நாள் அமெரிக்க காதலியை கரம் பிடித்தார்..! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது நீண்டகால காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனை திருமணம் செய்துள்ளார்.

டெல்லி-என்சிஆர் பகுதியில் இருவீட்டாரின் குடும்பம், நெருங்கிய நண்பர்கள் மற்றும் சில பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு தனியார் நிகழ்வாக நடைபெற்றுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் துபாயில் சந்தித்த இவர்களுக்கு இடையே முதலில் நட்பு உருவாகி, பின்னர் காதலாக மாறியுள்ளது. 


இருவரும் கடந்த 2025 மே மாதம் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தவானின் காதலியாக இருந்து மனைவியாகியுள்ள சோஃபி ஷைன், அமெரிக்காவைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான 'நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷன்'-இல் இரண்டாம் துணைத் தலைவராக உள்ளார்.

ஷிகர் தவானின் 'டா ஒன் ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் தொண்டுப் பிரிவான 'ஷிகர் தவான் ஃபவுண்டேஷன்' அமைப்பின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். தவான் முன்னதாக 2012-இல் ஆயிஷா முகர்ஜியை திருமணம் செய்திருந்த நிலையில், இவர்களுக்கு சோராவர் என்ற மகன் உள்ளார்.

தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-இல் பிரிந்த இவர்களுக்கு, அக்டோபர் 2023-இல் டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இதனையடுத்து தனது புதிய காதலியான  சோஃபி ஷைனை தவான் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cricketer Shikhar Dhawan marries longtime girlfriend


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->