'தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்வார் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்'; ஓபிஎஸ்-ஐ விமர்சித்துள்ள டிடிவி.தினகரன்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. நேற்றையதினம் சட்டப்பேரவை வளாகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசி இருந்தார். இது தமிழக அரசியலில் தற்போது பேசும் பொருளாகியுள்ளது.

நேற்று ஸ்டாலினை சந்தித்த பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தார். அப்போது, ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருந்தது, இதற்கு வாழ்த்து தெரிவிக்க காலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன் என்று குறிப்பிட்டார். அத்துடன்,  திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. மக்கள் நினைப்பதை தான் எனது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார் என்று தெரிவித்தார்.

அப்போது, தி.மு.க.வில் இணைவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,   "பொறுத்து இருந்து பாருங்கள்" என்று பதிலத்துள்ளார். அதாவது பன்னீர் செல்வம் தி.மு.க.வில் இணைவது பற்றிய கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காதது, அவர் தி.மு.க. ஆதரவு மனநிலையில் இருப்தாகவும், திமுகவில் இணைவதர்கான் வாய்ப்புகள் இருப்பதற்கான வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 'ஓபிஎஸ் தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய தொடங்கிவிட்டார்' என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன் கூறியதாவது; 

''ஓபிஎஸ் தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய தொடங்கிவிட்டார். அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டது நியாயமான நடவடிக்கை என இப்போது தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு தீங்கு செய்துவிட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dinakaran has criticized OPS for saying that he will do anything to get a position


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->