ஆன்மீக போர்வையில் ஆபாசம்..? ஆச்சிரமத்தில் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சாமியார்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல சாமியார், சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி வாரணாசியில், 'வித்யா மடம்' என்ற ஆசிரமத்தை நடத்தி வருகிறார். அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுவர்களை சாமியார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார்கள் எழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்து.

இது குறித்து ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி முக்தி நிர்மான் அறக்கட்டளையின் தலைவர் அசுதோஷ் பிரம்மாச்சாரி மஹாராஜ் மற்றும் சிலர் இணைந்து போலீசில் புகார் அளித்தனர். ஆனால், இந்த வழக்கைப் பதிவு செய்ய பிரயாக்ராஜ் காவல்துறையினர் மறுத்ததால், அசுதோஷ் நீதிமன்றத்தை நாடினார்.

அதன்படி, அவரது புகார் மனுவில் 'வித்யா மடத்தில் தங்கியிருந்த சிறுவர்கள், அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதியால், அந்த மடத்தின் 05-வது மாடியில் வைத்து பாலியல் துன்புறுத்ததலுக்கு ஆளாக்கப்பட்டனர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன், இதற்கான வீடியோ ஆதாரங்கள் அடங்கிய சி.டியை சமர்ப்பித்து, பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு சிறுவர்களை நீதிமன்றத்தில் அசுதோஷ் ஆஜர்படுத்தியுள்ளார். மேலும், அவிமுக்தேஸ்வரானந்தர் தனது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும், ஆன்மீகப் பணியின் போர்வையில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று பிரயாக்ராஜ் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அசுதோஷ் பிரம்மாச்சாரியால் சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாக்குமூலங்களை நீதிமன்றம் ஆய்வு செய்தது.

அடுத்ததாக, மனுவை விசாரித்த நீதிபதி வினோத் குமார், சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை ஏற்றுக்கொண்டு, காவல்துறை இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

மேலும், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி மீது FIR பதிவு செய்ய காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Court orders POCSO case to be registered against priest who sexually abused children at ashram


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->