விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்…! நாசா ஆர்டெமிஸ்-2 மூலம் மனிதனை மீண்டும் நிலவுக்கு கொண்டு செல்லும் பெரிய முயற்சி...! - Seithipunal
Seithipunal


மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் கனவை நனவாக்கும் முயற்சியில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா தீவிரமாக முன்னேறி வருகிறது.

பல கட்ட சோதனைகள் மற்றும் தொழில்நுட்ப பரிசோதனைகளுக்கு பின்னர், ஆர்டெமிஸ்–2 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, புதிய சாதனைக்குத் துவக்கமிட்டுள்ளது.

இந்த முக்கியமான பயணத்தில் கனடாவைச் சேர்ந்த ஒருவரை உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் ஒரு நாள் முழுவதும் பூமியைச் சுற்றி, விண்கலத்தின் உயிர் காக்கும் அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை விரிவாகச் சோதனை செய்தனர்.

அதன் பின்னர், ‘டிரான்ஸ்லூனார் இன்ஜெக்ஷன்’ எனப்படும் சக்திவாய்ந்த என்ஜின் எரிப்பின் மூலம், அவர்கள் நிலவை நோக்கி முன்னேற்றப்பட்டனர்.

இந்த பயணத்தின் மூலம், நிலவின் இதுவரை மனிதர்கள் நேரடியாக காணாத மறுபக்கத்தை மிக நெருக்கமாகக் காணும் பெருமையை இந்த குழு பெறவுள்ளது.

இது விண்வெளி ஆய்வில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. சுமார் ரூ.8.64 லட்சம் கோடி மதிப்பிலான இந்த மாபெரும் திட்டம், 2028ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள மனிதர்களின் நிலவுத் தரையிறக்க முயற்சியான ஆர்டெமிஸ் 4க்கு முன்னோட்டமாக அமைகிறது.

இதற்கிடையில், பூமியை விட்டு தொலைவுக்கு பயணிக்கும் தருணத்தில், விண்வெளி வீரர்கள் நீல நிறத்தில் ஒளிரும் பூமியின் அபூர்வமான அழகைக் கேமராவில் பதிவு செய்துள்ளனர்.

இந்த மெய்மறக்கச் செய்யும் காட்சியை நாசா வெளியிட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அந்த புகைப்படம் வேகமாக வைரலாகி உலகம் முழுவதும் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new chapter space history NASA Artemis 2 major effort return humans moon


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->