நான்கு முனைப் போட்டி ஐந்தாக மாறியது…! - 4ம் கட்ட வேட்பாளர்களை அறிவித்து அதிர வைத்த சசிகலா....! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் களம் தற்போது கடும் பரபரப்பில் உள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் ஆகியவற்றுடன் ஏற்கனவே நான்கு முனைப் போட்டி நிலவி வந்தது.இந்த நிலையில், அரசியல் சமன்பாட்டை மாற்றும் வகையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சசிகலாவுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சசிகலா மற்றும் ராமதாஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகி, அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடுமையாக இருந்த நான்கு முனைப் போட்டி, இந்த புதிய கூட்டணியால் தற்போது ஐந்து முனைப் போட்டியாக மாறி, தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

இதற்கிடையில், அ.இ.பு.த.ம.மு கழகத்தின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை சசிகலா வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளார். மேலும், முன்பு அறிவிக்கப்பட்ட இரண்டு தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள்:
பொள்ளாச்சி (123) – மெய்குரு (எ) முருகவேல்
திரு.வி.க நகர் (தனி) (15) – சி. கிறிஸ்டி
கோவை வடக்கு (118) – கே. ராகுல்காந்தி
திருச்செந்தூர் (215) – கோபாலகிருஷ்ணன்
பேராவூரணி (177) – ரா. ரவி
ஒட்டப்பிடாரம் (தனி) (217) – அமுதா
அருப்புக்கோட்டை (207) – பா. தர்மராஜ்
பரமத்தி-வேலூர் (95) – கே.ஆர். விஜயசூர்யபாலாஜி
பல்லாவரம் (30) – ராஜ்குமார்
மாற்றப்பட்ட வேட்பாளர்கள்:
விளாத்திகுளம் – செ. பொன்பாண்டி
உளுந்தூர்பேட்டை – ரா. உதயகுமார்
இந்த புதிய கூட்டணியும், வேட்பாளர் மாற்றங்களும் தமிழக தேர்தல் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, முடிவுகள் குறித்து எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

four way contest turned five way contest Sasikala shocked by announcing candidates 4th phase


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->