T20 World Cup; அபிஷேக் சர்மா பார்ம் குறித்த கேள்விக்கு, அசத்தல் பதிலளித்துள்ள சூரிய குமார் யாதவ்..! - Seithipunal
Seithipunal


டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் இன்று சூப்பர் 08 தொடரின் முதல் ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு இடையில் கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடக்கவிருந்த போட்டி,  மழையினால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். 

நாளை இரண்டாவது சூப்பர் 08 போட்டி, மதியம் 03;00 மணிக்கு இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இலங்கை, கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது. 03 வது போட்டி, தென் ஆப்பிரிக்கா- இந்தியா இடையில் மாலை 07:00 மணிக்கு அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த சூப்பர் 08 போட்டிக்கு முன் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அபிஷேக் சர்மாவின் பார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்துள்ளதாவது; அதாவது, 'அபிஷேக் சர்மாவின் பார்ம் குறித்து கவலைப்படுபவர்களைக் கண்டு நான் கவலைப்படுகிறேன். அவரது ஆட்டத்தை நினைத்து ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்?''என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், அவர் இன்னும் ரன் அடிக்கத் தொடங்கவில்லை என்பதால், இனி அவரை எதிர்கொள்ளப் போகும் எதிரணிகளை நினைத்துதான் நான் கவலைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளதோடு, அவர் பெரிய ஷாட்களை ஆடத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 'இது ஒரு குழு விளையாட்டு. அணியின் தேவைக்கேற்ப அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். அவர் சிறப்பாக ஆடினால் மகிழ்ச்சி. தவறினால் அதை ஈடுகட்ட நாங்கள் இருக்கிறோம்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக கடந்த ஆண்டு அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்காக ரன் குவித்தார். இந்த முறை அவருக்காக நாங்கள் அதைச் செய்வோம் என சூர்ய குமார் யாதவ் பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Surya Kumar Yadav gives a surprising answer to a question about Abhishek Sharmas farm


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->