திரைக் கவர்ச்சியா? இன எழுச்சியா? பணத்திற்காக அல்ல, தமிழ் இனத்திற்காக தேர்தலில் நிற்கிறோம்; சீமான் பேச்சு..!
Seeman says he is standing for the Tamil nation not for money
''ஐந்தாவது முறையாக ஒரு அரசியல் கட்சி எந்த சமரசமும் செய்யாமல் சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து நின்று தேர்தல் களத்திலே நிற்கிறது என்றால், அது இந்திய துணைக் கண்டத்திலே நாம் தமிழர் கட்சி மட்டும்தான்.'' என்று திருச்சி மாநில மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது; தனித்துவத்தோடு இருக்கிறோம்.. தனித்து உயர்ந்த தத்துவத்தோடு இருக்கிறோம். வியாபாரம் தேவையில்லை. வேண்டியது அரசியல் விடுதலைதான் என்று பேசியுள்ளார்.
அத்துடன், மொழி அழிந்தால் நாடு அழியும். இது ரசிகர் கூட்டம் அல்ல. லட்சியக் கூட்டம் என்று கூறியதோடு, திரைக் கவர்ச்சியா? இன எழுச்சியா? என்று கேள்வி எழுப்பியதோடு, பணத்துக்காக நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. தமிழ் இனத்துக்காக நிற்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும், நின்ற தேர்தல்களில் எல்லாம் தோல்வி அடைந்தோம். அடிபட்ட புலியும், அடிமைப்பட்ட இனமும் எழுந்து நிற்கிறோம் எனவும், இங்கே அரசியல் என்பது தேர்தலுக்காகக் கட்டமைக்கப்பட்டுள்ளது, மக்களுக்கான அரசியல் இல்லை என்று விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இங்கு செய்தி அரசியல், விளம்பர அரசியல் இருக்கிறது. ஆனால், சேவை அரசியல், செயல் அரசியல் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஐந்தாயிரத்தை வாங்குகின்ற என் அம்மாக்கள் கைகளில் 02 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது என்பதை அறிவுச் சமூகம் அறிய வேண்டும் என்றும், இதை சிந்திக்க தொடங்கி விட்டால் மாற்றத்திற்கான அரசியல் தொடங்கிவிட்டது என்று சீமான் பேசியுள்ளார்.
English Summary
Seeman says he is standing for the Tamil nation not for money