அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி; இந்தியாவுக்கான இறக்குமதி வரி 10 சதவீதமாக குறைப்பு..! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு இறுதியில்  இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 25 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். அதிலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிய விவகாரத்தில் இந்தியா மீது அதிக வரி விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக இந்தியா-அமெரிக்கா  இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீதம் வரி, 18 சதவீதம் என குறைத்து ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாக கூறி, அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

அதாவது, உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை விதிப்பதற்கு அதிபர் டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது அமெரிக்க உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனையடுத்து, அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது எனவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

1977-ஆம் ஆண்டு சட்டத்தை பயன்படுத்தி டிரம்ப் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் செல்லாது என தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து அமெரிக்காவுக்குள் நுழையும் பொருட்களுக்கு உடனடியாக 10 சதவீதம் கூடுதல் வரியை விதித்து டிரம்ப் புதிய உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். 

இந்த புதிய விதிப்பு வரும் 24-ஆ ம் தேதி முதல் 150 நாட்களுக்கு அமலில் இருக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தியா ஏற்கனவே ஒப்புக்கொண்ட 18 சதவீதம் வரி விகிதம் மாறி, இனிமேல் 10 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படும்.

இருப்பினும், மருந்து பொருட்கள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட துறைகளுக்கான வரி விலக்குகள் ஏற்கனவே உள்ள சிறப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், 'இந்தியாவுடனான எனது உறவு மிகவும் அற்புதமானது, வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலில்தான் உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், உச்சநீதிமன்ற தீர்ப்பால் வர்த்தகம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்ட போராட்டத்தால் அமெரிக்க நுகர்வோர் மீதான வரிச்சுமை 16.9 சதவீதத்தில் இருந்து 9.1 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 17,500 கோடி டாலர் வரை வரிப்பணத்தை திரும்ப அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Import duty on India reduced to 10 percent


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->