'இந்திய தேர்தல் நடைமுறையை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன'; தலைமை தேர்தல் ஆணையர் ..!
Chief Election Commissioner says that the world has recognized the Indian electoral system
இந்தியாவில் நடைபெறும் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதை உலகம் அங்கீகரிக்கிறதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஐடியா (International IDEA) என்பது உலகளவில் ஜனநாயக செயல்முறைகளை ஆதரிக்கும் ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். டிசம்பர் 03-ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் 2026-ஆம் ஆண்டின் சர்வதேச ஐடியாவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளார்.
இந்த சர்வதேச ஐடியாவுக்கு தலைமை பொறுப்பை ஏற்பது என்பது ஒவ்வொரு இந்தியர்களுக்கும் பெருமையான விஷயம் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இந்தியாவில் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதை உலகம் அங்கீகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 30 ஆண்டுகளின் வரலாற்றில் முதல் முறையாக, உலகின் 37 நாடுகளின் குழு, இந்தியாவை இன்டர்நேஷனல் ஐடியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்க அழைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இது இந்திய மக்கள் மற்றும் அனைத்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் மிகப்பெரிய கௌரவமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Chief Election Commissioner says that the world has recognized the Indian electoral system