விஜய் கூப்பிட்ட பிரச்சாரத்திற்கு போவீங்களா? - சூரி அளித்த பகீர் தகவல்.!!
actor soori answer about tvk question
பிரபல இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்'. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ் கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம், தவெக தலைவர் விஜய் அழைத்தால் பிரசாரத்திற்கு செல்வீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சூரி, ``அண்ணன் சரியாக போய் கொண்டிருக்கிறார். ஆனால் எனக்கு நிறைய பட வேலைகள் இருக்கிறது'' என்றுத் தெரிவித்தார். சூரியின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
actor soori answer about tvk question