நாம தான் முதலிடம்! தமிழக அரசு பெருமையோடு வெளியிட்ட அறிக்கை!
TN Government milk and fish
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு பால், மீன்வள செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒட்டுமொத்த வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு புகழை பெற்று வருவதாகவும் தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "தமிழ்நாடு பால், மீன்வள செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. உணவு தானிய உற்பத்தி 457.08 லட்சம் மெட்ரிக் டன், சராசரியாக 5.66 சதவீத வேளாண் வளர்ச்சியை தமிழ்நாடு எட்டி உள்ளது.
தமிழகம் முழுவதும் 5,427 கி.மீ. நீள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு 2.10 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 449 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் 62,820 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
வேளாண் வளர்ச்சி திட்டங்களால் கேழ்வரகு, கொய்யா உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம். மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளி, மல்லிகை, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்.
வேர்க்கடலை, தென்னை, உற்பத்தி திறனில் 3-வது இடம் பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது" என்று அந்த அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
English Summary
TN Government milk and fish