தமிழகம் முழுவதும் உடனே கணக்கெடுங்க! மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு!
Sathankulam incident TNGovt order
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை சிலிர்க்க வைத்தது. கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன், சாலையோரத்தில் இருந்த பாதுகாப்பு இல்லாத 50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது. கிணறு தண்ணீரால் நிரம்பிய நிலையில், காரும் அதில் முழுமையாக மூழ்கியது.
இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதேசமயம், காரில் பயணித்த கோச்சோம், சைனிகிருபா, ஜெரின் எஸ்தர் ஆகியோர் கதவை திறந்து நீந்தி உயிர் தப்பினர்.
விபத்துக்குப் பிறகு தீவிரமாக நடந்த மீட்புப்பணிகளின் பின்னர், சுமார் 4 மணி நேரத்தில் காரும், உயிரிழந்த 5 பேரின் உடல்களும் மீட்க்கப்பட்டன. பின்னர், அவர்கள் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
இச்சம்பவத்தையடுத்து, மாநிலம் முழுவதும் சாலையோர பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர்களுக்கு இதுகுறித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், சாலையோரம் உள்ள கிணறு, பள்ளங்கள் உள்ளிட்ட அபாயகரமான இடங்களை விரைவாக ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
Sathankulam incident TNGovt order