பாஜகவுடன் தவெக கூட்டணியை விஜய் இன்னும் மறுக்கவில்லையே... பரபரப்பை ஏற்படுத்திய தமிழிசை!
Tamilisai Soundararajan Vijay Tamilaga Vettri Kazhagam BJP Alliance
2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இருக்காது என தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் சில நாள்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்க்கு அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய்தான் இருக்கிறார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என அவரே இதுவரை எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை.
ஒருவர் கூறுவது, கட்சி நிலைப்பாட்டாக ஏற்க முடியாது. அதிகாரபூர்வமாக கூட்டணி இல்லையென த.வெ.க. அறிவிக்கவில்லை என்பதும் முக்கியம்.”
மேலும், “திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என விரும்பும் அனைவரும் இன்று ஒன்று சேர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. திமுகவுக்கு எதிராக செயல்பட விரும்பும் சக்திகள் கூட்டமைக்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.
English Summary
Tamilisai Soundararajan Vijay Tamilaga Vettri Kazhagam BJP Alliance