3 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமனம்.!!
mrk panneerselvan appointed three district in charge
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தற்போது முதலே தேர்தல் பணிகளை செயல்படுத்த தொடங்கிவிட்டன. அந்த வகையில், சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக திமுகவில் ஏற்கனவே 7 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், 8 ஆவது பொறுப்பாளராக தற்போது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக செயல்படுவார் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இதேபோன்று மற்ற அரசியல் காட்சிகளிலும் சட்டசபையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
English Summary
mrk panneerselvan appointed three district in charge