கல்லூரி மாணவியை திமுக SIR-களுக்கு இரையாக்க முயற்சித்த திமுக நிர்வாகி! அதிமுக வெளியிட்ட வீடியோ!
ADMK Post video About DMK Member College Girl Abuse
தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், பலருக்கு தன்னை இரையாக்க முயற்சித்ததாகவும், தன்னை போலவே தனது கணவரிடம் 20 வயதுடைய 20 பெண்கள் சிக்கியுள்ளதாகவும் அரக்கோணம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி அளித்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியை கொடுமடுத்திய அந்த நபர் ஆளும் திமுகவின் இளைஞரணி நிர்வாகியான தெய்வச்செயல் என்றும் அந்த மாணவி புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அதிமுக தரப்பில் விடுக்கப்பட்டுள்ள செய்துகுறிப்பில், "கல்லூரி மாணவியை ஏமாற்றி, திமுக SIR-களுக்கு இரையாக்க முயற்சித்த இராணிப்பேட்டை மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி!
வழக்கு பதியாமல்ஒரு மாதம் அழைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை.
அரக்கோணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து பாதிக்கப்பட்ட பெண் முறையிட்டதும், FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக-வின் SIR-களிடம் இருந்து தமிழ்நாட்டு பெண்கள் காக்கப்பட வேண்டும்! அதற்கு ஒரே வழி, 2026-ல் மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைவதே" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ADMK Post video About DMK Member College Girl Abuse