பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தத 2 போலீசார் சஸ்பெண்ட்!
BJP Nainar Nagendran TN POlice suspended
திருப்பூரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்தது தொடர்பாக, இரண்டு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனுப்பர்பாளையம் மற்றும் தெற்கு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த மந்திரம் மற்றும் சின்னசாமி என்ற இரு காவலர்கள், நாகேந்திரனை தனிப்பட்ட முறையில் சந்தித்ததாக கூறப்படுகிறது.
இருவரும் சகோதரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு தொடர்பாக துறை உள்பட்டவர்களிடையே அதிருப்தி எழுந்தது. இதையடுத்து, திருப்பூர் காவல் கண்காணிப்பாளரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, இருவரும் தற்போது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, அரசியல் தொடர்புகளை வைத்து காவலர்கள் செயற்படக்கூடாது எனும் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசு ஊழியர்களின் நடத்தை விதிமுறைகளில் அரசியல் சார்ந்த தொடர்புகள் அனுமதிக்கப்படாத சூழலில், இது முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
English Summary
BJP Nainar Nagendran TN POlice suspended