அமெரிக்காவில் சூறாவளி கோரத்தாண்டவம்; 32 பேர் பலி: 5,000 கட்டிடங்கள் சேதம்: 50 மில்லியன் மக்கள் ஆபத்து..? - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் கடும் சூறாவளியால் 32 பேர் பலியாகியுள்ளதோடு, 5,000 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களான கென்டகி, மிசோரி, வர்ஜீனியா பகுதியை நேற்றும், நேற்று முன்தினமும் கடுமையான சூறாவளி கோரத்தாண்டவம் ஆடியது. இதில், கென்டகியில் 18 பேர், மிசோரியில் 07 பேர், வர்ஜீனியாவில் 02 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மிசோரியின் செயின்ட் லூயிஸ் பகுதியில் சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு 140 மைல் அளவில் வீசியுள்ளது.

இந்த கடுமையான சூறாவளியால் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும், கென்டகியின் லாரல் கவுண்டியில் 17 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு தீயணைப்பு வீரரும் அடங்குவாவதாக கூறப்படுகிறது. இந்த சூறாவளியுடன் கூடிய கனமழையால், புழுதிப் புயலும் ஏற்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், மிசோரி மற்றும் கென்டகியில் சுமார் 1.4 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளனர்.

இந்த கடும் சூறாவளி குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:  டெக்சாஸ், ஓக்லஹோமா மற்றும் அர்கான்சாஸ் பகுதிகளுக்கு மேலும் சூறாவளி எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இதனால் 50 மில்லியன் மக்கள் ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றதாகவும், அமெரிக்க செஞ்சிலுவை அமைப்பு செயின்ட் லூயிஸில் தற்காலிக தங்குமிடங்களை அமைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அமெரிக்காவில் இடம்பெற்ற பேரிடர்களில் இது மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்று என்று  கென்டகி ஆளுநர் ஆண்டி பெஷியர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

32 people killed in US hurricane 5 000 buildings damaged 50 million people at risk


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->