நடிகர் சரவணன் மற்றும் 2ம் மனைவி மீது முதல் மனைவியின் கடும் குற்றச்சாட்டு...! - Seithipunal
Seithipunal


90 's காலத்திலிருந்து நடித்த நடிகர் சரவணன், 'நந்தா', 'பருத்திவீரன்' படங்களில் நடித்து பிரபலமானார். இவர் 2003-ம் ஆண்டு சூர்யஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார். மேலும், 2015-ம் ஆண்டு முதல் ஸ்ரீதேவியுடன் லிவிங் டூ கெதர் வாழ்ந்த இவர், 2019-ம் ஆண்டு அவரையே 2 வது திருமணம் செய்துக்கொண்டார்.

இவர் தனது 2 மனைவிகளையும் அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்மேல் வீடுகளில் குடி வைத்தார்.அவ்வப்போது வரும் பிரச்சனையால், முதல் மனைவி சூர்யஸ்ரீ, சரவணனின் மீது ஆவடி காவல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில்,"இரண்டாவது மனைவி ஸ்ரீதேவி மற்றும் சரவணன் என் வீட்டிற்கு எதிரிலேயே குடியிருப்பதால் தினமும் சண்டை, தகராறு ஏற்படுகிறது.செருப்பு ஸ்டாண்ட் உடைத்து, வீடு என்னுடையது என சொந்தமாகக் கொண்டாடுகிறார்கள்.

என் செலவுக்கு எந்த உதவியும் செய்யவில்லை; ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை.மேலும், விவாகரத்து வழக்கு நடைபெற்று வந்தாலும், சரவணன் ஆஜராகவில்லை.

இதன் காரணமாக எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு காரணம் சரவணன் மற்றும் அவருடைய இரண்டாவது மனைவி ஸ்ரீதேவி தான் " என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

First wifes strong accusations against actor Saravanan and his second wife


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->