அசத்தல்...! CM பினராயி விஜயனுடன் 'ரவி மோகன்' ஓணம் கொண்டாட்டத்தில் வைரல் ...!
Ravi Mohan goes viral with CM Pinarayi Vijayan during Onam celebrations
கடந்த ஆகஸ்ட் 29 முதல் தொடங்கிய 'ஓணம் பண்டிகை' கேரளா முழுவதும், தமிழக தெற்கு பகுதிகளிலும் மக்கள் கொண்டாட்ட உணர்வில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. நாளை நடைபெற உள்ள திருவோணம் தான் இந்த பண்டிகையின் சிறப்பு மிகுந்த நாள்.

இந்த ஓணத்தை முன்னிட்டு, ஹிருதயபூர்வம், லோகா, ஓடு குதிரா சாடும் குதிரா போன்ற மலையாளப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி, பண்டிகை கொண்டாட்டத்துக்கு வண்ணம் தீட்டியுள்ளன.
குறிப்பாக இதில், ‘லோகா’ படம் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வரவேற்பைப் பெற்றுவருகிறது.இந்நிலையில், இன்று கேரள சுற்றுலா துறையின் சார்பில் நடைபெற்ற ஓணம் விழாவை கேரள முதல்வர் 'பினராயி விஜயன்' தொடங்கி வைத்தார்.
மேலும், விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகர்கள் ரவி மோகன் மற்றும் பசில் ஜோசப் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி, இந்த இருவரும் தற்போது சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் இணைந்து நடித்து வருவது ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Ravi Mohan goes viral with CM Pinarayi Vijayan during Onam celebrations