'உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்தது என மீண்டும் நிரூபணமாகியுள்ளது': முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!
Chief Minister MK Stalin is proud that Tamil Nadu has once again proven to be the best in higher education
NIRFதரவரிசைப் பட்டியல் 2025-இல் உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு என தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பில், அனைத்துப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களையும் வரவேற்று வாய்ப்பளிக்கும் தமிழ்நாட்டின் உயர்கல்விச் சூழலுக்குக் கிடைத்த வெற்றி என் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: NIRFதரவரிசைப் பட்டியல் 2025: உயர்கல்வி சிறந்த தமிழ்நாடு என மீண்டுமொரு முறை நிரூபணமானது. இந்தியாவின் தலைசிறந்த 100 உயர்கல்வி நிறுவனங்களில் 17, தலைசிறந்த 100 கல்லூரிகளில் 33, தலைசிறந்த 50 மாநிலப் பல்கலைக்கழங்களில் 10 என இப்பட்டியல் அனைத்திலும் அதிக கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய - அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிய - அனைத்துப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களையும் வரவேற்று வாய்ப்பளிக்கும் தமிழ்நாட்டின் உயர்கல்விச் சூழலுக்குக் கிடைத்த வெற்றி இது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Chief Minister MK Stalin is proud that Tamil Nadu has once again proven to be the best in higher education