நைஜீரியாவில் பெரும் துயரம்: ஆற்றில் படகு மூழ்கி விபத்து: 60 பேர் பலி; 10 பேர் கவலைக்கிடம்..!
60 dead as boat sinks in Nigeria river
நைஜீரியாவில் படகு விபத்து ஒன்றில் 60 பேர் பலியாகியுள்ளதோடு, 10 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. நைஜீரியாவில் குறிப்பாக மழைக்காலங்களில் அடிக்கடி படகு விபத்துக்கள் இடம்பெறுகின்றன.
ஆனாலும், அந்நாட்டு மக்களுக்கு படகு போக்குவரத்துக்குதான் அதிக முக்கியத்தும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலம் மலாலே மாவட்டத்தில் உள்ள ஒரு துக்க நிகழ்ச்சிக்கு 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு, அதிக சுமையுடன் இருந்துள்ளது. இதனால் குறித்த படகு மரத்தின் அடிப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் படகிலிருந்து இருந்த பெரும் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த படகு விபத்தில் 60 பேர் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோரை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் காணாமல் போன 05 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். இந்த படகு விபத்து குறித்து மலாலே மாவட்ட போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் நைஜீரியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
60 dead as boat sinks in Nigeria river