ஆசிய கோப்பை ஹாக்கி சூப்பர்-4 சுற்று: மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!
India beat Malaysia to win Asia Cup Hockey Super 4 round
12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 08 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, சீனாவும், ‘பி’ பிரிவில் மலேசியா, தென்கொரியாவும் சூப்பர் 04 சுற்றுக்கு தேர்வாகியுள்ளன.
குறித்த சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில் நேற்று மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கிய சூப்பர்-4 சுற்றில் இந்தியா மற்றும் 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் முடிவில் இரு அணிகளும் 2-2 என கோள்கள் அடித்து போட்டியை ட்ரா செய்தன.
இந்நிலையில், சூப்பர் 04 சுற்றில் இன்று நடந்த போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இதில் இந்திய அணியின் சார்பில் மன்தீப் சிங், சுக்ஜீத் சிங், ஷிலானந்த் லக்ரா மற்றும் விவேக் சாகர் பிரசாத் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டுள்ளனர்.
English Summary
India beat Malaysia to win Asia Cup Hockey Super 4 round