புகைப்படங்கள் நீக்கம்… ஒரு பதிவு… செல்வராகவன் வாழ்க்கையில் திருப்பமா? - Seithipunal
Seithipunal


2000-களில் தமிழ் சினிமாவின் கதையமைப்பையே மாற்றிய இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் செல்வராகவன்.‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ போன்ற திரைப்படங்கள் மூலம் தனித்துவமான ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய அவர், இன்றளவும் பேசப்படும் இயக்குநராகவே இருந்து வருகிறார்.

தற்போது ‘மெண்டல் மனதில்’, ‘7ஜி ரெயின்போ காலனி 2’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.மேலும், திரையுலக வாழ்க்கையைப் போலவே, செல்வராகவனின் தனிப்பட்ட வாழ்க்கையும் பல திருப்பங்களை கண்டுள்ளது. நடிகை சோனியா அகர்வாலுடன் அவரது திருமணம் நடந்தாலும், கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து சென்றனர்.

அதன் பின்னர், தனது உதவி இயக்குநரான கீதாஞ்சலியை அவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கீதாஞ்சலி, ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த கணவர் செல்வராகவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை திடீரென நீக்கியிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா? விவாகரத்து வரை விஷயம் போகுமா? என்ற கிசுகிசுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், செல்வராகவன் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் அவர்,“திடீரென எல்லாமே தவறாக போகும். சுற்றியிருப்பவர்கள் அனைவரும் துரோகம் செய்வது போலத் தோன்றும். ‘நீ கடவுளா?’ என்று பிதற்றுவீர்கள். அந்த நேரத்தில் அமைதியாக இருங்கள்.

இது ஒரு காலகட்டம்தான். பெரும் மலை கூட பனியாக கரையும். எல்லாமே சரியாகிவிடும்”என்று எழுதியுள்ளார்.இந்த பதிவை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் எழுந்துள்ள சர்ச்சைகளோடு தொடர்புபடுத்தி ரசிகர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர்.

உண்மையில் செல்வராகவனுக்கும், கீதாஞ்சலிக்கும் இடையில் என்ன நடந்தது? இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை நீக்கியதற்கான காரணம் என்ன? என்ற கேள்விகள் தற்போது பல கோணங்களில் எழுந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Photos deleted One post Is Selvaraghavan turning point his life


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->