ஆபத்தான அணி இது; இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றுமா..? MS.தோனியின் ஒரே கவலை இதுதான்..! - Seithipunal
Seithipunal


2026 டி20 உலகக்கோப்பை இன்னும் இரண்டே நாட்களில் ( பிப்ரவரி-07) தொடங்கவுள்ளது. இம்முறை 20 அணிகள் பங்கேற்கின்றனர். அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 03 ஆண்டுகளில் இந்திய அணி, 59 டி20 போட்டிகளில் 51 வெற்றிகள், 08 தோல்விகளுடன் வலிமையாக உள்ளது.

பெரும்பாலும் இந்திய அணி இந்த முறையும் கோப்பை வெல்லும் என்று பலரும் கூறிவரும் நிலையில், இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற, முன்னாள் இந்திய கேப்டன் தோனியிடம், 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா கோப்பை வெல்லுமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.  

அதற்கு பதிலளித்த தோனி கூறியதாவது: ''இது ஒரு சார்பான பதில் இல்லை, ஆனால், இதுவரை இருந்த இந்திய அணிகளிலேயே மிகவும் ஆபத்தான அணியாக தற்போதை டி20 உலகக்கோப்பை அணி விளங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒரு டி20 அணியில் என்ன தேவையோ அது எல்லாமே தற்போதைய அணியில் இருக்கிறது என்றும், அவர்களிடம் நல்ல அனுபவம் இருக்கிறது, அழுத்தமான நேரங்களில் அவர்களுடைய அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், என்னுடைய ஒரே கவலையாக பனி இருக்கும், பனி எனக்கு பிடிக்காத ஒன்று. ஏனென்றால் அது உங்களுடைய பிளான் அனைத்தையும் மாற்றிவிடும் என்றும் கூறியுள்ளார். ஒரு நாள் உங்களுடைய பேட்ஸ்மேனுக்கு அரைநாளாக இருந்து, எதிரணி வீரருக்கு சிறப்பான நாளாக இருந்தால், அப்போது பனியும் ஒரு காரணியாக இருந்தால் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது, அது ஒரு லீக் போட்டியாகவோ அல்லது நாக் அவுட் போட்டியாகவோ கூட இருக்கலாம் என்றும், அப்போது தான் நமக்கு பிரார்த்தனை தேவையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஆனால் எப்படி இருந்தாலும் தற்போதைய இந்திய அணி மிகவும் ஆபத்தான அணிகளில் ஒன்று, இந்தியா நிச்சயம் வரலாறு படைக்கும் என்று மஹேந்திர சிங்தோனி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MS Dhonis opinion on the Indian team regarding the 2026 T20 World Cup


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->