15 வருடங்களாக நோயில் வாடும் நாகார்ஜுனா! ஏன் இன்னும் குணமாகவில்லை? வெளியான தகவல்! - Seithipunal
Seithipunal


டாலிவுட்டின் மன்மதன் என்று அழைக்கப்படும் நடிகர் நாகார்ஜுனா, 66 வயதிலும் இளம் ஹீரோக்களை மிஞ்சும் வகையில் தனது ஃபிட்னஸை பராமரித்து வருகிறார். வயது அதிகரித்தாலும், அவரது உடல் தகுதி, கிளாமர் மற்றும் எனர்ஜி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. தினமும் உடற்பயிற்சி செய்து, ஒழுங்கான வாழ்க்கை முறையை பின்பற்றி வரும் நாகார்ஜுனாவை பார்த்தால், அவருக்கு எந்த உடல்நலப் பிரச்சனையும் இருப்பதாக யாரும் நம்ப முடியாத நிலையே உள்ளது.

ஆனால், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், நாகார்ஜுனா தனது உடல்நலக் குறித்த ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக தனக்கு மூட்டு வலி இருந்ததாகவும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை பரிந்துரைத்த போதும் அதை தவிர்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக லூப்ரிகன்ட் சிகிச்சை மற்றும் PRP சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்ததாக கூறினார். இதன் மூலம் தற்போது தனது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை இல்லாமல் முன்னெச்சரிக்கையுடன் வாழ்க்கையை தொடர விரும்புவதாகவும் நாகார்ஜுனா தெரிவித்தார்.

அவரது கட்டுப்பாடு, ஒழுக்கமான வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி மீதான அக்கறைதான் இன்றும் இளமையாக இருப்பதற்கான ரகசியம் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தற்போது நாகார்ஜுனா பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிஸியாக உள்ளார். சீசன் 3 முதல் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை தொகுத்து வரும் அவர், அதே நேரத்தில் தனது 100வது திரைப்படத்திற்கான பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படம் முற்றிலும் வித்தியாசமான கான்செப்டில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nagarjuna has been suffering from illness for 15 years Why is he still not cured Information has been released


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->