திமுக பதுக்கிய தேர்தல் பணம் யார் வீட்டில் இருக்குனு எனக்கு தெரியும்! – உரிய நேரத்தில் பறிமுதல் செய்யப்படும்: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


வரும் சட்டசபைத் தேர்தலில் தொகுதிவாரியாக விநியோகம் செய்வதற்காக திமுகவினர் பதுக்கி வைத்திருக்கும் பணம் எங்கு உள்ளது என்பது தனக்கு தெரியும் என்றும், உரிய நேரத்தில் அந்த பணம் நிச்சயம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய அவர், கடந்த தேர்தல்களில் இறந்தவர்களே வாக்குப்பதிவு நாளன்று வந்து ஓட்டு போட்டதாக குற்றம் சாட்டினார். எஸ்ஐஆர் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பீகார் சட்டசபைத் தேர்தலில் 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது இதற்கு உதாரணம் என்றும் கூறினார். அதே நிலை தமிழகத்திலும் தொடரும் என அவர் தெரிவித்தார்.

கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது சில கூட்டணி கட்சிகள் செய்த தவறுகளால்தான் என்றும், அன்றே 110 தொகுதிகளில் பாஜக–அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார். 2026 தேர்தலில் அதிமுக, பாஜக, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்கும் எனவும் அவர் உறுதியாக தெரிவித்தார்.

மேலும், ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் வழங்குவதாக திமுகவினர் பேசுவதாக கூறிய அவர், ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் சுமார் 20 கோடி ரூபாய் வரை திமுகவினர் பதுக்கி வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். யார் யார் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்கு தெரியும்; சரியான நேரம் வரும்போது அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் குறித்தும் பேசிய நயினார் நாகேந்திரன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பின்படி தீபம் ஏற்றுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அதை எதிர்த்த ஒரே நபர் முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் என்றும் குற்றம்சாட்டினார். இது வாக்கு வங்கி அரசியல் என்றும், தீபத்தூண் குறித்து திமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் தவறானவை என்றும் அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I know whose house the election money stashed by DMK is in It will be confiscated at the right time Nayinar Nagendran sensational speech


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->