கார் பரிசு என ஏமாற்றி உசிலம்பட்டி பெண்ணிடம் ரூ.3.30 லட்சம் மோசடி; போலீசார் விசாரணை..! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் 26 வயது பெண் ஒருவர், இணைய வழியில் பொருட்கள் வாங்கும் நிறுவனம் ஒன்றில் கணக்கு வைத்து அடிக்கடி பொருட்கள் வாங்கி வந்துள்ளார். கடந்த 04-ஆம் தேதி அவரது செல்போன் வாட்ஸ்- அப்புக்கு தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், அவர் கணக்கு வைத்திருந்த தனியார் நிறுவனத்தின் 08-வது ஆண்டு விழாவையொட்டி முதல் பரிசாக கார் கிடைத்துள்ளது என குறிப்பிட்டு இருந்துள்ளது.

இதை நம்பிய அந்தப் பெண் சம்பந்தப்பட்ட எண்ணைத் தொடர்பு கொண்டபோது காரை பரிசாகப் பெறுவதற்கு முன்பதிவுக் கட்டணம், ஜிஎஸ்டி, வருமான வரி உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என அதில் பேசிய நபர் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து குறித்த நிறுவனத்தில் இருந்து பேசிவதாக கூறிய நபர் கூறியபடி அந்த பெண் தனது வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு தவணையில் ரூ.3.30 லட்சம் அனுப்பியுள்ளார். நீண்ட நாள் காத்திருந்தும் அவருக்கு கார் பரிசு கிடைக்கவில்லை. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்துள்ளார்.

அதன்பின்னரே மதுரை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A woman from Usilampatti was defrauded of over Rs 3 lakh online by promising a car as a gift


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->