அதிமுகவிடம் 80 தொகுதிகள் கேட்க அமித் ஷா பச்சைக்கொடி? சரிப்பட்டு வராதுங்க..சென்னை வரப்ப நானே பேசுறேன்.. கண்கள் சிவந்த அமித் ஷா! - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக–பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடும் இழுபறியில் உள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சந்திப்பில், அதிமுகவிடம் 80 தொகுதிகள் கேட்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 50 தொகுதிகளை கேட்டாலே அதிமுக தயக்கம் காட்டும் நிலையில், ஆட்சியில் பங்கு பெற வேண்டுமென்றால் அதிக தொகுதிகள் அவசியம் என அவர் விளக்கியதாக சொல்லப்படுகிறது.

இதற்கு பதிலளித்த அமித் ஷா, கவலைப்பட வேண்டாம், 80 தொகுதிகளை வாங்கிவிடலாம், தொகுதிகளின் பட்டியலை தருங்கள், விரைவில் தமிழக தேர்தல் பொறுப்பை ஏற்றுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வருவார், அவர் இந்த விஷயத்தை கவனிப்பார் என உறுதி அளித்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக 50 தொகுதிகளுக்கு மேல் தர மறுத்தால் தனியாக ஆட்சி அமைக்க முயற்சிக்கும் வாய்ப்பு உள்ளது, அது கூட்டணிக்கு சரியாக இருக்காது என்றும் அமித் ஷா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கோவை மண்டலத்தில் மட்டும் 10 தொகுதிகளில் 6 தொகுதிகளை பாஜக கோரியிருப்பது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர் ஆகிய நகர்ப்புற தொகுதிகளுடன் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், வால்பாறை ஆகிய பகுதிகளையும் பாஜக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேற்குத் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களிலும் பாஜகவின் கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம் ஆகிய தொகுதிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், சிவகங்கை மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, பரமக்குடி, சாக்கோட்டை, மதுரை தெற்கு, போடிநாயக்கனூர், ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளையும் பாஜக கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்பூர், ஆனைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர் ஆகிய ஐந்து தொகுதிகளையும் ஒரே கட்டமாக பாஜக கோருவது, கூட்டணி பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இந்த கோரிக்கைகள் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, அமித் ஷா தமிழக அரசியலில் நேரடியாக கவனம் செலுத்த திட்டமிட்டு, வாரத்திற்கு ஒருமுறை சென்னை வந்து தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், கிண்டி, அடையார், மயிலாப்பூர், நங்கநல்லூர் பகுதிகளில் தற்காலிக குடியிருப்பு தேர்வு செய்யப்படுவதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 15ஆம் தேதி அமித் ஷா தமிழகம் வர உள்ள நிலையில், கூட்டணி விரிவாக்கம் மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah green flag to ask AIADMK for 80 seats They wonot come back I will speak when I come to Chennai Amit Shah eyes are red


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->