கதவு பூட்டாமல் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா...? நெல்லை சம்பவம்...சிறுமி உள்பட 2 பேர் கைது...!
Do you know what happens if you sleep without locking door nellai theft incident 2 people including girl arrested
நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் ராஜா (36) சம்பவத்தன்று இரவு, காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவை முழுமையாக பூட்டாமல் லேசாக திறந்து வைத்துள்ளார். அந்த சிறிய அலட்சியமே, திருடனுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது.

அந்த நேரத்தில் வீட்டுக்குள் அமைதியாக நுழைந்த மர்மநபர், அறையில் இருந்த பீரோவை திறந்து, அதில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகைகளை களவாடிச் சென்றார். மறுநாள் காலை தூக்கத்தில் இருந்து விழித்த ராஜா, பீரோ திறந்துக் கிடந்ததையும், நகைகள் காணாமல் போனதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், மானூர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், ராஜாவின் வீட்டில் திருட்டு நடத்தியது 15 வயது சிறுமி என்பது அதிர்ச்சி தகவலாக வெளிவந்தது.
மேலும், திருடப்பட்ட நகைகளை அந்த சிறுமி தனது ஆண் நண்பரான மானூர் அருகே உள்ள களக்குடி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் முத்துசாமி (19) என்பவரிடம் கொடுத்து, அவற்றை மறைத்து வைத்ததும் காவலர்கள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய இருவரையும் காவலர்கள் கைது செய்து, திருடப்பட்ட 4 பவுன் தங்க நகைகளை மீட்டனர். இந்த சம்பவம், பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Do you know what happens if you sleep without locking door nellai theft incident 2 people including girl arrested