தனுஷ் வதந்திகளுக்குப் பின்… காதல் குறித்து கீர்த்தி சனோன் ஓபன் டாக்...!
After Dhanush rumors Kriti Sanon opens up about love
நடிகர் தனுஷுடன் இணைந்து கீர்த்தி சனோன் நடித்த ‘தேரே இஸ்க் மெயின்’ திரைப்படம் சமீபத்தில் ரூ.150 கோடி வசூலை கடந்து வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறது. இந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது, தனுஷ் – கீர்த்தி சனோன் இடையே காதல் மலர்ந்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் வதந்திகள் பரவின.
ஆனால், அவை குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதி செய்யவில்லை.இந்த சூழலில், தற்போது கீர்த்தி சனோன், தொழிலதிபர் கபீர் பஹியாவுடன் நெருக்கமாக சுற்றிவருவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த தகவல்கள் வதந்தியா அல்லது உண்மையா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.இதற்கிடையே, காதல் குறித்து தனது மனநிலையை கீர்த்தி சனோன் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
அண்மையில் அவரளித்த பேட்டியில்,“காதல் என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஊடுருவி நிற்கும் உணர்வு. அந்த காதலின் மீது எனக்கு உள்ள நம்பிக்கை அளவிட முடியாதது.
நான் உண்மையிலேயே காதலை நம்புகிறேன். அது ஒருவரை நேசிப்பது மட்டுமல்ல; வாழ்க்கையையே அன்புடன் அணுகுவது. அந்த அன்புதான் அனைவருக்கும் அவசியம்”என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கீர்த்தி சனோனின் இந்த உரை, அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசப்படும் வதந்திகளுக்கு இடையில் புதிய கவனத்தை பெற்றுள்ளது.
English Summary
After Dhanush rumors Kriti Sanon opens up about love