விஜய் சொன்ன கண்காட்சி இதுதானா?பராசக்தி படத்தோட ஹைலைட்டே இதுதான்..ஓபன் பண்ண சிவகார்த்திகேயன்!
Is this the exhibition Vijay was talking about This is the highlight of Parasakthi Sivakarthikeyan to open it
வள்ளுவர் கோட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பராசக்தி படக்குழுவினர் இன்று பராசக்தி கண்காட்சியை திறந்து வைத்தனர். இந்த கண்காட்சி நான்கு நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 1960களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் ரயில் வண்டி செட், பழைய வீடுகள், கடை வீதி, குடிசை மற்றும் டெண்ட் கொட்டா போன்ற அமைப்புகள் வடிவமைக்கப்பட்டு, பார்வையாளர்களை பராசக்தி உலகத்துக்கே அழைத்துச் செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பராசக்தி படத்தின் 10 நிமிட சிறப்பு வீடியோ யூடியூபில் வெளியிடப்படாது என்றும், கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள டெண்ட் கொட்டாவை நேரில் பார்ப்பவர்களுக்கு மட்டுமே அந்த காட்சிகள் காண்பிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
பராசக்தி படத்தின் முதல் விழாவாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், படக்குழுவின் கடின உழைப்பை பாராட்டினார். பராசக்தி படத்தில் மாணவர்களின் சக்தியே மிகப்பெரிய ஹைலைட் எனக் குறிப்பிட்ட அவர், இயக்குநர் சுதா காங்கிரா இந்த படத்திற்காக சுமார் நான்கு ஆண்டுகள் உழைத்துள்ளதாக தெரிவித்தார். இந்த படம் ஒரு முக்கியமான சமூக பிரச்சனையை பேசுவதோடு, காதல், பாசம், வீரம், புரட்சி என பல அம்சங்களை கொண்டுள்ளதாகவும், இந்த பொங்கலுக்கு பராசக்தி ஒரு சிறந்த கொண்டாட்டமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அதர்வா, ஸ்ரீலீலா குறித்தும் பேசிய சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலாவின் முதல் தமிழ் படம் இதுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது என்றார். மேலும், ரவி மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம் என குறிப்பிட்ட அவர், நீண்ட காலமாக ஹீரோவாக வெற்றிகரமாக நடித்துவரும் ஒருவர் வில்லனாக நடிப்பது வேறலெவல் என்றும் கூறினார். அதனால் தான் டைட்டிலில் முதலில் ரவி மோகன் பெயரையே இடம் பெற்றுள்ளதாகவும், படத்தில் அவர் வில்லனாக இருந்தாலும், தனக்கு எப்போதுமே கல்லூரி காலத்திலிருந்து ரசித்த ஹீரோவாகவே இருப்பார் என்றும் சிவகார்த்திகேயன் பேசினார்.
English Summary
Is this the exhibition Vijay was talking about This is the highlight of Parasakthi Sivakarthikeyan to open it