ஆசிரியர் தகுதி தேர்வு; பிப்ரவரி 18 முதல் விண்ணப்பிக்கலாம்; தேர்வு வாரியம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்விற்கு பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் விண்ணபிக்கலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூலை 04-ஆம் தேதி டெட் முதல் தாள், 05-ஆம் தேதி டெட் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 01 முதல் 08-ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கக் கூடிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் 18-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணபிக்கலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

அதற்காக தற்காலிகமாக தேர்வு தேதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 04-0ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான  முதல் தாள் மற்றும்  05-ஆம் தேதி  இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இருப்பினும் இந்த தேதியில் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், தேர்விற்கான விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட தகவல்களை தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The examination board has announced that applications for the Teacher Eligibility Test can be made from February 18th


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->