ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘டெக்ஸ்லா’ படப்பிடிப்பு தொடக்கம்!சைலண்டாக சம்பவம் பண்ணும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
Aishwarya Rajinikanth Dexla shooting begins Aishwarya Rajinikanth silently makes a splash
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய திரைப்படமான ‘டெக்ஸ்லா’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. கண்ணன் ரவி குரூப்பின் கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஒன்பதாவது படமாக உருவாகும் இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் ஜெய் மற்றும் பிரபல மலையாள நடிகர் சூர்யாஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தீபக் ரவி இணை தயாரிப்பாளராக உள்ளார். படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா அமைக்கிறார்.
மேலும், ஆனந்த் ராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் கண்ணன் ரவி,“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்துடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு பெருமையான தருணம். என் தயாரிப்பு பயணத்தின் ஆரம்ப கட்டத்திலேயே இத்தகைய வாய்ப்பு கிடைத்தது ஒரு வரமாக கருதுகிறேன். சிறந்த கலைஞரும் என் நண்பருமான சூர்யாஜ் வெஞ்சாரமூடுடன் இணைந்து பணியாற்றுவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். இது நீண்ட மற்றும் அர்த்தமுள்ள பயணத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன்,”என்று தெரிவித்தார்.
மலையாள நடிகர் சூர்யாஜ் வெஞ்சாரமூடு கூறுகையில்,“இந்தப் படத்தின் கதையும், நான் ஏற்றுள்ள கதாபாத்திரமும் என்னை மிகவும் கவர்ந்தது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,”என்றார்.
டைட்டில் டீசரைப் பார்க்கும்போது, பழைய நினைவுகளைத் தூண்டும் பல உணர்ச்சிகரமான தருணங்கள் நிறைந்த ஃபீல் குட் டிராமா வகை படமாக ‘டெக்ஸ்லா’ உருவாகி வருவதாகத் தெரிகிறது. படம் குறித்த மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
‘டெக்ஸ்லா’ திரைப்படம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ஐந்தாவது படமாகும். இதற்கு முன் அவர்:
-
‘3’ (தனுஷ், ஸ்ருதி ஹாசன்)
-
‘வை ராஜா வை’ (கௌதம் கார்த்திக்)
-
‘சினிமா வீரன்’ (ஆவணப்படம்)
-
‘லால் சலாம்’ (ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த்)
ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
‘டெக்ஸ்லா’ படத்தின் இசை உரிமையை யு1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி, சமீபத்தில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தையும் தயாரித்திருந்தார். அதற்கு முன் ‘ராவண கோட்டம்’ படத்தையும் தயாரித்துள்ளார்.
அவரது தயாரிப்பில் தற்போது ‘பேங் பேங்’, ‘ஜீவா 46’, இயக்குநர் போஸ் வெங்கட் படம், கௌதம் கார்த்திக் படம், உமாபதி ராமையா படம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
‘டெக்ஸ்லா’ படத்தின் டீசர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை தொடர்ந்து, படத்தின் அடுத்த கட்ட அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
English Summary
Aishwarya Rajinikanth Dexla shooting begins Aishwarya Rajinikanth silently makes a splash