வரும் பிப்ரவரி 23 இல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..!
Cabinet meeting to be chaired by Chief Minister Stalin on February 23rd
வரும் பிப்ரவரி 23-ந்தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், அன்றைய தினம் மாலை 06.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி தருவது தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 05 ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டப்பட்டது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம். அதன்படி தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் பிப்- 05 (வியாழக்கிழமை) நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அறையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரின் கூட்டம் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதியில் நடைபெறவுள்ளது.
English Summary
Cabinet meeting to be chaired by Chief Minister Stalin on February 23rd