IPL 2026; ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் இவரா..? - Seithipunal
Seithipunal


இந்தியாவின்  உள்ளூர் டி 20 கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் மினி ஏலமும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.18 கோடிக்கு டிரேடிங் முறையில் வாங்கப்பட்டார்.

சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கே ஆல் ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவை ரூ.14 கோடிக்கும், சாம் கரணை ரூ.2.4 கோடிக்கும் டிரேடிங் செய்திருந்தது. இதனையடுத்து, எதிர் வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தன.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரியான் பராக் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர், ராஜஸ்தான் அணிக்காக 84 போட்டிகளில் விளையாடி 07 அரைசதங்களுடன் 1,566 ரன்களைச் சேர்த்துள்ளார்.

கடந்தாண்டு சஞ்சு சாம்சன் காயம் காரணமாக முதல் சில போட்டிகளை தவறவிட்டார். ரியான் பராக் பொறுப்பு கேப்டனாக சில போட்டிகளில் செயல்பட்ட வந்த நிலையில், தற்சமயம் அணியின் முழு நேர கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சஞ்சு சாம்சன் சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேநேரம், அவர், கடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும், தற்போது நடைபெறும் டி 20 உலக கோப்பை தொடரிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனால் டி 20 தொடரில் அவரின் தொடர் சொதப்பல் சி.எஸ்.கே. ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajasthan Royals announce new captain


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->