நாட்டை உலுக்கிய மணிப்பூர் கலவரம்; 11 எப்.ஐ.ஆர். தொடர்பாக விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க சிபிஐக்கு உத்தரவு..! - Seithipunal
Seithipunal


கடந்த 2023-ஆம் ஆண்டு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குகி- மெய்தி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில், 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான வீடுகள் தீ வைத்து கொழுத்தப்பட்டன. 

இதன்காரணமாக அம்மாநில மக்கள் சொந்த வீடுகளை இழந்து அண்டை மாநிலங்களுக்கும், முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். நாட்டை உலுக்கிய இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 11 வழக்குகளை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான நீதிபதி ஜாய்மால்யா பாக்சி கொண்ட அமர்வு முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, "11 எப்.ஐ.ஆர். தொடர்பாக விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

அத்துடன், நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான கமிட்டி பரிந்துரை செய்த மறுவாழ்வு மற்றும் நலத்திட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில மற்றும் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், இந்த வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court asks CBI to submit investigation report on 11 FIRs related to Manipur riots


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->