கோயம்பேடு மெட்ரோ அருகே அதிரடி சோதனை! - காரில் கஞ்சா கடத்திய சாப்ட்வேர் என்ஜினீயர் கைது...!
Action raid near Koyambedu Metro Software engineer arrested smuggling ganja car
சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு காவலர்கள், காரில் இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரின்ஸ் ஜேக்கப் (30) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அவர் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயராக சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், விடுமுறை நாளை பயன்படுத்தி கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அவரை காவலர்கள் கைது செய்து, அவரிடம் இருந்து சுமார் 80 கிராம் கஞ்சாவையும், பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் நகரத்தில் போதைப் பொருள் கடத்தல் குறித்து காவலர்கள் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Action raid near Koyambedu Metro Software engineer arrested smuggling ganja car