'எல்.ஐ.கே’ புரமோஷனில் அதிரடி...! 'முதல்வரானால் முதல் கையெழுத்து இதுதான்'...! - கீர்த்தி ஷெட்டி பேச்சு பரபரப்பு
Action promotion LIK This first signature if I become Chief Minister Krithi Shetty speech creates stir
தென்னிந்திய திரையுலகில் வேகமாக உயர்ந்து வரும் இளம் நடிகையாக கீர்த்தி ஷெட்டி ரசிகர்களின் கவனத்தை குவித்து வருகிறார். நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.தற்போது, பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்.ஐ.கே)’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படம் வருகிற 10ஆம் தேதி வெளியாக உள்ளதால், புரமோஷன் பணிகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் “நான் முதல்வராக இருந்தால் என்ன செய்வேன்?” என்ற கேள்விக்கு கீர்த்தி ஷெட்டி தன்னம்பிக்கையுடன் பதிலளித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “நம் நாட்டில் பாலியல் வன்கொடுமை போன்ற கடுமையான குற்றங்களுக்கு தகுந்த அளவிலான தண்டனைகள் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
அதனால், அந்த குற்றங்களுக்கு இன்னும் கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம். நான் முதல்வராக இருந்தால், அதற்கான சட்டமே என் முதல் கையெழுத்தாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கீர்த்தி ஷெட்டியின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Action promotion LIK This first signature if I become Chief Minister Krithi Shetty speech creates stir