அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி ஆய்வு; முறைகேடு புகார்; குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பதவி நீக்கம்; தமிழ்நாடு அரசு உத்தரவு..!
Director of Prosecution Krishnaraja Dismissed from Post Following Allegations of Irregularities
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றிய வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணராஜா, கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தமிழக அரசின் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநராகச் செயல்பட்டு வந்தார்.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு ஒவ்வொரு துறைகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறையில் அமைச்சர் நிர்மல்குமார் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டார். அதில், சட்டத்துறையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் குற்ற வழக்குகள் தொடர்வு துறையில் சில முறைகேடு புகார்கள் கண்டறியப்பட்டதாகத் கூறப்படுகிறது.

அந்த வகையில், அமைச்சர் நிர்மல் குமாரின் உத்தரவின் பேரில், தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜாவை பதவியில் இருந்து நீக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு பதிலாக பொறுப்பு குற்ற வழக்கு தொடர்வு இயக்குநராக ஆர்.சேகர்துரை நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ஆய்வுகளுக்குப் பிறகே டெண்டர் அறிவிப்பை வெளியிட ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் அறிவுறுத்திய நிலையில், டெண்டர்கள் குறித்த விவரங்களை ஆராய மூன்று குழுக்களை அமைத்து மின்சாரத் துறை உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Director of Prosecution Krishnaraja Dismissed from Post Following Allegations of Irregularities