ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமியின் கனவை நிறைவேற்றிய சிம்ரன்! மாற்றுத்திறனாளி சிறுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்து நெகிழ வைத்த சிம்ரன்! - Seithipunal
Seithipunal


90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதை கவர்ந்த சிம்ரன், மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரின் கனவை நனவாக்கிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமி நிஷாவை நேரில் அழைத்து, சைக்கிள் பரிசளித்ததுடன், அவருடன் இணைந்து நடனமாடியும் சிம்ரன் மகிழ்ச்சியளித்துள்ளார்.

பிறவியிலேயே ஒரு கை இல்லாமல் பிறந்த நிஷா, தனது மாற்றுத்திறனை ஒரு தடையாக கருதாமல் சிறு வயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக நடிகை சிம்ரனின் நடனத்தை பார்த்து ஊக்கமடைந்த அவர், சிம்ரன் நடித்த பல பாடல்களுக்கு நடனமாடி அதன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்துள்ளார்.

இந்த வீடியோக்களை பார்த்த சமூக ஆர்வலர் ஆஷிக், நிஷாவின் திறமையை சிம்ரனின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், பள்ளிக்குச் செல்ல ஒரு புதிய சைக்கிள் வேண்டும் என்பது சிறுமியின் நீண்டநாள் ஆசை என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நிஷாவை தனது வீட்டிற்கு அழைத்த சிம்ரன், அன்புடன் வரவேற்று நீண்ட நேரம் அவருடன் உரையாடியதாக கூறப்படுகிறது. பின்னர், நிஷா நீண்ட நாட்களாக பயிற்சி செய்து வந்த சிம்ரனின் பிரபல பாடலுக்கு அவருடன் இணைந்து நடனமாடி சிறுமியை உற்சாகப்படுத்தினார்.

அதன்பின், நிஷாவின் நீண்டநாள் கனவாக இருந்த புதிய சைக்கிளையும் பரிசாக வழங்கிய சிம்ரன், "படிப்பிலும் முழு கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் உன் நடனக் கனவையும் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து சாதிக்க வேண்டும்" என்று ஊக்கமளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்ரனும் நிஷாவும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சிறுமியின் திறமையை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், அவரது கனவை நிறைவேற்றிய சிம்ரனின் செயலை ரசிகர்களும், திரையுலகினரும் பாராட்டி வருகின்றனர்.

நடிகை சிம்ரன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்மன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதுடன், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நடன நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Simran fulfilled the dream of a 10 year old girl born with one arm Simran touched hearts by surprising the differently abled girl


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->