நடிகர் அஜித் தாயார் மறைவு: நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் விஜய்..!
Tamil Nadu Chief Minister and Vijay personally visited to pay homage following the passing of actor Ajith mother
வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) சனிக்கிழமை அதிகாலை சென்னை பாலவாக்கத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். தனது தாயாரின் மறைவுச் செய்தியை அறிந்த அஜித் துபாயிலிருந்து இன்று மாலை சென்னை வந்தடைந்தார். நாளை காலை 08:30 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது.
மோகினி மணி அவர்களின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அஜித்குமாரின் தாயாரின் உடலுக்கு, தமிழக முதல்வர் விஜய், சென்னையில் உள்ள அஜித்தின் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தினார். மறைந்த மோகினி மணியின் அம்மையாரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய், அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நேரில் ஆறுதல் கூறினார்.
நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதற்கு முன்னதாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது;
''அருமை நண்பர் அஜித் குமார் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
English Summary
Tamil Nadu Chief Minister and Vijay personally visited to pay homage following the passing of actor Ajith mother