தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் பயிற்சி பெற்றால் மேதையாகலாம்; ப.சிதம்பரம்..!
P Chidambaram states that one can become a genius by training in both their mother tongue and English
அறிவியல் ஒளி மாத இதழின் 19 ஆம் ஆண்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் தொழிநுட்ப மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் காங்கிரஸ் ஆட்சியின் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறந்த கட்டுரைகள் எழுதிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதையடுத்து அங்கு பேசிய அவர் கூறியதாவது; ஆங்கிலத்தில்தான் அறிவியல் நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் வருவதால் ஆங்கிலம் மொழியை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தாய்மொழியான தமிழ் மொழியையும் நன்கு கற்க வேண்டும் என்றும் தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் பயிற்சி பெற்றால் நிச்சயமாக அறிஞராக, மேதையாக வர முடியும் என்று பேசியுள்ளார்.
மேலும், நமக்கு இடையே உள்ள ஒரே அந்நிய மொழி ஆங்கில மொழி தான் என்றும் அதை கற்றுக்கொள்வது மிக அவசியம் என்றும் விழாவில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
P Chidambaram states that one can become a genius by training in both their mother tongue and English