சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை; புதிதாக 18 போலீசாரை நியமனம் செய்துள்ள தமிழ்நாடு காவல் துறை..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததும், பெண்கள் மற்றும் குழந்தைளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சிங்கப்பெண் அதிரடிப்படை உருவாக்கப்படும் என தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் போது உறுதி அளித்தார்.

அதன்படி, இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கடந்த 10-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றப் பின் சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கும் ஆணைக்கு இரண்டாவதாக கையெழுத்திட்டார். அதனை தொடர்ந்து சிங்கப்பெண் அதிரடிப்படை தலைமை அதிகாரியாக ஐஜி பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து மற்ற படைகளில் இருந்து தனித்து காணப்படுவதற்காக சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு என தனி சீருடை மற்றும் இலச்சினை உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்திற்கான எஸ்.பி., டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர்கள் மற்றும் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட 18 பேரை தமிழ்நாடு காவல் துறை புதிதாக நியமித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Tamil Nadu Police Department has newly appointed 18 officers to the Singa Pen Special Striking Force


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->