பனையூர் பண்ணையார் அங்கிள் சினிமாவிலும் COPY PASTE; அரசியலிலும் COPY PASTE; விஜய்யை விமர்சித்துள்ள அதிமுக...! - Seithipunal
Seithipunal


பனையூர் பண்ணையாரே... இந்த FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே?கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க Uncle! என்று தவெக தலைவர் விஜய்யை கடுமையாக அதிமுக ஐ.டி. விங் விமர்சித்துள்ளது. 

இது குறித்து அதிமுக ஐ.டி. விங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?
அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க... வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த், ஆகியோரைப் பார்த்து COPY PASTE uu....

அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் Legacy-யை திருடி, COPY PASTE uu... இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?

"தி.மு.க. எதில் எல்லாம் Out Of Control" என்பதை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் 
எடப்பாடி பழனிசாமி அவர்களும், மாண்புமிகு புரட்சித் தமிழர் ஆணைக்கிணங்க நாமும் பதிவிட்டதைப் பார்த்து Copy அடித்து யாரோ எழுதிக் கொடுத்ததை, "Action" என்று சொன்னதும் அடி மாறாமல் ஒப்பித்துள்ளார் பனையூர் பண்ணையார் நடிகர் விஜய்...!

சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா?

கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பது போல, மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், "அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள்" என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது.

உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்? 

எங்கள் பெரியாரின் பெயரில், எங்கள் அண்ணாவின் பெயரில், எங்கள் புரட்சித் தலைவரின் பெயரில் சவாரி செய்வதை நீங்கள் நிறுத்துங்களேன் பார்ப்போம்! எங்கள் முழக்கம் இன்றும் "அண்ணா நாமம் வாழ்க!" தான்!
நாங்கள் என்றென்றும் புரட்சித் தலைவரின் "இரத்தத்தின் இரத்தமான" உடன்பிறப்புகள் தான்!

நாங்கள் இன்றும், என்றும் முன்நிறுத்துவது எங்கள் இதயதெய்வம் "அம்மாவின் ஆட்சி"யைத் தான்!

"அம்மாவின் ஆட்சி அமைய அணிலாய்" இருந்ததாக சொல்லிய உங்களை, மிகப்பெரிய துயரத்தின் போது, 41 பேர் மரித்த போது பேசக்கூடாது என்ற "அம்மா கற்றுத் தந்த" அரசியல் பண்போடு தான் மாண்புமிகு புரட்சித் தமிழர் 
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாகரிகத்தோடு நடந்துகொண்டார்.

அப்புறம் பனையூர் பண்ணையாரே... இந்த FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே?

கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க Uncle! என்று கடுமையா விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK has criticized Vijay for COPY PASTE in cinema and COPY PASTE in politics


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->