நம்பிக்கையை நாசமாக்கிய காதலன்…! நண்பர்களுடன் சேர்ந்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை...!
boyfriend who destroyed trust student harassement by his friends
கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் மாகடி டவுனைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், மாகடியைச் சேர்ந்த விகாஸ் என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் அந்தப் பழக்கம் காதலாக மாற, விகாஸ் தனது இனிய பேச்சு மற்றும் நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளால் மாணவியை மயக்கியுள்ளார். ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய இளம்பெண், விகாஸின் ஆசை மொழிகளை நம்பி காதலில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து இருவரும் செல்போன் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். ஒரு நாள் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்திக் கொண்டு விகாஸ் அங்கு சென்றுள்ளார். அப்போது காதல் வார்த்தைகள் கூறி மாணவியை கட்டாயப்படுத்தியதாகவும், பின்னர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த கொடூர சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.அந்த ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி, தனது நண்பர்களான பிரசாந்த் மற்றும் சேத்தன் ஆகியோருடன் உல்லாசமாக இருக்குமாறு விகாஸ் மாணவியை கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதற்கு மாணவி மறுத்ததையடுத்து, மிரட்டல் மேலும் தீவிரமானது. பின்னர், சேத்தனின் வீட்டிற்கு மாணவியை அழைத்து சென்ற விகாஸ், அங்கு பிரசாந்த் மற்றும் சேத்தன் ஆகியோருடன் சேர்ந்து, மாணவியை மாறிமாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இந்த கொடூர கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றுள்ளது.
ஆனால், சமூக அவமானம், எதிர்காலம் குறித்த அச்சம் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட மாணவி நீண்ட நாட்களாக மவுனமாக இருந்துள்ளார். பின்னர் மன வேதனையை தாங்க முடியாமல் பெற்றோரிடம் நடந்ததை சொல்லி கதறி அழுதுள்ளார்.
அதையடுத்து மாணவியின் பெற்றோர் அவரைத் தைரியப்படுத்தி, மாகடி டவுன் போலீசில் புகார் அளிக்கச் செய்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதல் வலையில் வீழ்த்தி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விகாஸ், பிரசாந்த், சேத்தன் ஆகிய மூன்று பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் , போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சேத்தன் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வந்ததும், அவருக்கு திருமணமாகி மனைவி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதால், பிரசவத்திற்காக தாய் வீட்டில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், தனது வீட்டிலேயே நண்பரின் காதலியை வைத்து சேத்தன் இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டது போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
English Summary
boyfriend who destroyed trust student harassement by his friends