வரும் 11ந் தேதி முதல் மதுரை - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு..!
Additional coaches to be added to Vande Bharat train between Madurai and Bengaluru from the 11th
மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயிலில் வருகிற 11-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயிலில் வருகிற 11-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவில் இருந்து மதுரைக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் (வண்டி எண்-20671, 20672) வருகிற 11-ந் தேதி முதல் கூடுதலாக 08 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அத்துடன், மங்களூரு சென்டிரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கும், திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூரு சென்டிரலுக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் (20631, 20632) வருகிற 09-ந் தேதி முதல் கூடுதலாக -4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Additional coaches to be added to Vande Bharat train between Madurai and Bengaluru from the 11th