அத்திவாக்கம் சிறுமி சம்பவம்...! ஸ்டாலின் அரசை கடுமையாக தாக்கிய நயினார் நாகேந்திரன்...! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது,"செங்கல்பட்டு மாவட்டம் அத்திவாக்கம் பகுதியில் 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் அதிகரித்து வருவதோடு, வயது வித்தியாசமின்றி பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கவலைக்குரியதாக உள்ளது.

இத்தகைய சம்பவங்கள் மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு வருகிறது தானா என்ற சந்தேகமும் எழுகிறது.மாநிலம் முழுவதும் தினந்தோறும் நடைபெறும் வன்முறை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் வாழும் சூழல் நிலவுகிறது.

ஆனால் இதே நேரத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் தொடர்ந்து பங்கேற்கின்றனர் என்பது மக்களிடையே கேள்விகளை எழுப்புகிறது. சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்த கவனம் குறைந்து விட்டதா என்ற சந்தேகமும் உருவாகியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலையை குறித்து பெரும் கேள்விகளை எழுப்புகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Athivakkam Girl Incident Nainar Nagendran Launches Severe Attack MK Stalin Government


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->